
குரு பஸ் ஸ்டேண்டை நோக்கி சென்று கொண்டிருந்த தனபாலை வழி மறித்து ..
'ஓய் !! என்ன இந்த பக்கம் .... முகமே சரியில்லையே ..'
' நேத்து என் வீட்டுக் காரி , தம்பி பொண்ணை மார்கெட்ல வச்சு பார்த்திருக்கா ... அவ முகத்தில ஏதோ கலக்கம் தெரிஞ்சுதாம் .. அதான் நேர்ல போய் பார்த்திட்டு வரலாம்னு கிளம்பிட்டு இருக்கேன் ..'
'பார்த்தீரா !! ஒரு முக மாற்றத்தை வச்சே ஒருத்தரோட மனநிலையை தெரிஞ்சுக்க முடியுது .. உமக்கு தெரியுமா அமெரிக்காவுல ஒரு டாக்டர் ஒருத்தரோட கையெழுத்தை வச்சே அவங்க மனநிலைய கண்டுபிடிக்க முடியும்னு சொல்லியிருக்காரு ..'
'அப்படியா??'
'போன வாரம் என்னோட நண்பர் உதயன் கிட்ட பேசினேன் , முன்னாடிகாலத்தில வீட்டுல போடுற கோலம் மூலமா வீட்டுல உள்ள நல்லது கெட்டது எல்லாத்தையும் சொல்லுவாங்களாம்..'
'கோலம் மூலமாவா???!!!'
'கோலம் போடுற நிறம் , புள்ளிகள் மற்றும் வளைவுகள்(சுழிகள் ) மூலம் பக்தி , கலாச்சாரம் , வீட்டில் உள்ள நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகள் ,நோய் ,தொழில் போன்ற எல்லாத்தையும் கண்டுபிடிக்க முடியும் .'
'ரொம்ப ஆச்சரியமா இருக்கே ..'
'அது மட்டுமல்ல ஒரு வீட்டுல கல்யாணத்துக்கு தயாரா வயதுக்கு வந்த பொண்ணு இருந்தா ... அதுக்கும் ஒருவகையான கோலம் இருக்காம். '
'அப்போ முன்னாடியெல்லாம் பொண்ணு தேடுரதிண்ணா, சும்மா நாலு தெரு நடந்து கோலங்களை மட்டும் பார்த்தா போதும்..அப்படி தானே '
'அதே தான்..கப்புன்னு புடிச்சுகிட்டீரே!!! '
'குரு அய்யா !! உங்க மூலம் கோலம் பற்றி நிறைய தெரிஞ்சுகிட்டேன் ..ரொம்ப நன்றிங்கய்யா..'
'www.udhayam.in இந்த சைட்டுல போய் பாரும் இன்னும் நிறைய கத்துக்கலாம் ..'
' ரொம்ப நன்றி குரு !! அப்புறம் உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்னு நினைச்சிகிட்டிருந்தேன் ..கேட்கவா'
' என்ன தயக்கம் கேளும் '
'அது வந்து உங்களுக்கும் உங்க சம்சாரத்துக்கும் இன்னைக்கு காலையில சண்டையா ??'
'ம்ம்ம் .............................................ம்ம்ம்
ஆமாம் உமக்கு எப்படி தெரியும்...'
'ஒம்ம பொண்டாட்டி போட்ட கோலம் கன்னத்தில பளிச்சினு தெரியுதே ....'
வாவ்........ சூப்பரா எழுதியிருக்கீங்க
ReplyDeleteகலக்கல் சுரேஷ் :))
//'www.udhayam.in இந்த சைட்டுல போய் பாரும் இன்னும் நிறைய கத்துக்கலாம் ..'//
ReplyDeleteதகவல் அருமை :))
முதல்ல உதயனை பற்றிய கதையை நல்லா எழுதியிருக்கீங்க சுரேஷ்
ReplyDeleteரொம்ப சந்தோசமா இருக்கு :)