Tuesday, September 14, 2010

மழை


குருவின் வீட்டை நோக்கி மழையில் நனைந்த படி ஓடி வருகிறார் வெங்கி .

'வாங்க வெங்கி ..ரொம்ப நனைஞ்சு போய் வந்திருக்கீங்க ..உள்ளே வாங்க ..'

'ஆமாங்க .இந்த பாழாய் போன மழை வந்து ..என்னோட முக்கிய வேலையை கெடுத்திடுச்சு ..'

'என்னங்க இது மழை பெஞ்சாலும் திட்டுறீங்க , பெய்யலைனாலும் திட்டுறீங்க...அப்போ என்ன தான் பண்ணனுமாம்...'

'மழை வந்து ராத்திரி வேளை மட்டும் பெஞ்சிட்டு ..பகல் நேரம் வெயில் வந்தா நல்லாயிருக்குமே ...அத விட்டுட்டு பகலில வந்து பெஞ்சா???'

'உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? மழை உருவாகிறது பகல் நேரத்தில்தான் .. முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது சூரிய வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது'

' அடடா...!!!'

'மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும்ஆவியாகிவிடுவது உண்டு'

'ம்ம்ம்ம்'

'அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. '

'அப்படியா????'

'தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகு கிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர் கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனரஅம .'

'இனிமேல் தண்ணி பஞ்சமே வராதின்னு சொல்லுங்க ...'

'அப்புறம் .... நீங்க மழையில நனைஞ்சிட்டு வரும்போது .... கையில ஏதோ ஒண்ணு நனையாம பாதுகாத்து கொண்டான்தீன்களே என்னாது அது ...'

'ஹி ஹி ஹி அது புதுசா வாங்கின குடைங்க.....'

Friday, September 10, 2010

மதுரைக்கு பஸ்


கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் ...

'என் பெயர் குரு நான் மதுரைக்கு போறேன் நீங்க எங்கே போறீங்க ??'

'நானும் மதுரைக்கு தான் போறேன் ..எனக்கு 10 மணி பஸ் ...'

'அப்படியா ??? எனக்கு 11 மணிக்கு தான் பஸ் ..வாங்க இன்னும் டைம் இருக்கே ஒரு டீ சாப்பிட்டு விட்டு வரலாம்...'

' நான் கூட ஒரு டீ பைத்தியம் ...வாங்க ..'

' டீ என்ன தான் உடம்புக்கு புத்துணர்ச்சி கொடுத்தாலும் .... அது உடம்புக்கு நல்லதில்ல '

'ம்ம்ம் '

'காபி மற்றும் தேயிலையில் உள்ள “காபின்” ரசாயன பொருளில் உள்ள நச்சுத்தன்மையால் இதய நோய்களும், கேன்சர் போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாடி ஆராட்சி பண்ணி சொன்னாங்க ..ஆனா இப்போ அப்படியில்லை'

'அடடா???'

'தற்போது நடத்தப்பட்ட புதிய ஆய்வில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 8 கப் டீ அல்லது காபி குடித்தால் அவர்களின் மூளை மற்றும் இதயம் வலுப்பெறும் என்று தெரியவந்து இருக்கு '


(டீ கடைக்காரரிடம் )

' தம்பி எனக்கு சக்கரை இல்லாம போடுப்பா...'

'என்ன சார் உங்களுக்கு சர்க்கரை வியாதியா.????...'

'ஆமாங்க எண்ணப் பண்ணுறது ? உங்களுக்கு ஒண்ணு தெரியுமா மேற்கு சீனாவில் உள்ள மக்கள், தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பைக் கலந்து குடிக்கிரான்கலாம். .'

'ஆச்சரியமா இருக்கே !!!!'

'சரி சீக்கிரம் குடிச்சிட்டு வாங்க ... மணி பத்தாக போகுது ...'

(பஸ் ஸ்டேன்ட்ல் )

'என்ன ..பஸ் ஏறுற கவலை கூட இல்லாம மேல பார்த்திட்டு இருக்கீங்க ...'

'பஸ் பத்து மணிக்கு மேல வரும்னு சொன்னாங்களே ..'

'?????'

சுதந்திர தினம்


'ஓய் வெங்கடாசலம் எங்க போயிட்டு இருக்கீங்க ...'


'ஐயோ குரு உம்ம கண்ணுல பட்டுட கூடாதின்னு நினச்சேன் ..ஆனா நீங்களே குறுக்கே வந்துட்டீங்க .. இனி சும்மா விடவா போறீங்க ..சொல்றேன் ..'


'ம்ம்ம் சொல்லும் '


' ரெண்டு மூணு நாளா கேபிள் கட்டாயிருந்திச்சு ...இன்னைக்கு சுதந்திர தினம் வேற ..நிறைய சிறப்பு நிகட்சிகள் வருமில்லையா ... அதான் சரி செய்ய சொல்ல தான் போயிட்டு இருக்கேன் ..'


'நீருசொல்றது சரி தான் ...பண்டிகை நாள்மட்டும் தான் பகல் நேரம் நல்ல நிகட்சி போடுவாங்க...'


'சரி கிளம்பட்டா??'


'கொஞ்சம் நில்லுங்க ..uமக்கு தெரியுமா இப்போ தொலை காட்சி நிறுவனகள் பண்டிகைகளை வணிக நோக்கமா மட்டும் தான் கொண்டாடுறாங்க ..'


'எப்படி ???'


'இன்னைக்கு சுதந்திர தினம் இது சம்மந்தமா இன்னைக்கு ஒரு நிகழ்ச்சியும் இருக்காது ..சும்மா நமீதா பேட்டி ... சூர்யா பேட்டி ..தனுஷ் பேட்டி னு ஏதோ அவங்க தான் சுதந்திரம் வாங்கி கொடுத்த ரேஞ்சுக்கு காட்டுவாங்க ..நம்ம சுதந்திரத்துக்கு பாடு பட்ட நேதாஜி , காந்தி ..இவங்களை பற்றி யாரு நினைக்குரதில்லை'


'சரியா சொன்னீங்க ..எனக்கும் அந்த கவலை உண்டு...நாம என்ன பண்ண முடியும் ..எப்படி எதிர்ப்பை காட்ட முடியும்??? ...'


'முடியும் ...இந்த மாதிரி நிகழ்சிகளை நாம பார்க்காம இருந்தாலே ஒரு வித எதிர்ப்பு தான்... ஒரு நிகழ்ச்சியை எவ்வளவு மக்கள் பார்க்கிறாங்க ..என்பதை வச்சு தான் வியாபாரம் பண்ணுறாங்க ... அதிக மக்கள் பார்க்கலைனா அவங்களே நல்ல ப்ரோக்ராம் பண்ண யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க ..'


'அடடா !!! சூப்பரா சொன்னீங்க ...இத பத்தி இன்னும் சொல்லுங்களேன்...'


'ஐயோ மணி 1 ஆயிடுச்சே ..நான் உடனே வீட்டுக்கு போகணும் ..'


'உங்களுக்கு என்ன அவசர வேலை ??'


'இன்னைக்கு ஒரு மணிக்கு Xக்ஸ் டி.வி ல தமன்னா , தன்னோட காதல் அனுபவங்களை சொல்ல போறாங்க ...அத மிஸ் பண்ணாம பார்க்கணும் '



Thursday, September 9, 2010

தண்ணீர் நல்ல மருந்து


கையில் வாட்டர் பாட்டில் டன் வந்துகொண்டிருந்தார் நம்ம குரு , அப்போது நண்பர் வெங்கடாசலம் எதிர்ப் பட்டார்

'என்ன குரு கையில வாட்டர் பாட்டில் ..'

'உமக்கு ஒண்ணு தெரியுமா ? தண்ணீர் நல்ல மருந்தாக்கும்..'

'கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் '

'நம்ம உடம்போட மொத்த எடையில் எழுபது பங்கு தண்ணீர் தான்..அது உடல் முழுக்க இருந்தாலும் மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும் இரத்தம் , உமிழ்நீர்,நிணநீர் போன்ற திரவங்களிலும் , ஜீரண உறுப்புகளில் உள்ள சுரப்பிகளிலும் அதிக படியாக இருக்கு .'

'ஆமாம் குரு , ரேடியோல கூட போன வாரம் சொன்னாங்க ..நீங்க மேல சொல்லுங்க '

'நிறைய நோய்களுக்கு தண்ணீர் தான் மறைமுக மருந்தா இருக்கு ..நம்ம உடம்பில் உள்ள ஒவ்வொருபாகமும் ஒரு டாக்டர் தான்..'

'அப்படியா ?? ஆச்சரியமா இருக்கே !!!!'

'உண்மை தான் !! நமது உடம்புக்கு தண்ணீர் இன்மையால் ஏற்படும் உபாதை வரும்முன் அவைகள் நமக்கு தாகத்தை தோற்றுவிக்கின்றன ..இதனால் பல நோய்கள் வருமுன் நாம் காக்கப் படுகிறோம்.'

'அடடா...'

'ஒரு நாளைக்கு மூணு லிட்டர் தண்ணீராவது குடிக்கணும் இல்லைனா உடலில் நீர்சத்து குறைந்து தலைவலி வந்து விடும் ..'

'ரொம்ப நன்றி குரு !! எனக்கும் தாகம் எடுக்குது
கொஞ்சம் குடிச்சுக்கறேன்
'

'அய்யயோ குடிச்சிட்டீங்களா இது குடிக்கிற பாட்டில் இல்ல ...பேட்டரியில் ஊத்துற disட்ரில் வாட்டர் '

கன்னத்தில் போட்ட கோலம்


குரு பஸ் ஸ்டேண்டை நோக்கி சென்று கொண்டிருந்த தனபாலை வழி மறித்து ..

'ஓய் !! என்ன இந்த பக்கம் .... முகமே சரியில்லையே ..'

' நேத்து என் வீட்டுக் காரி , தம்பி பொண்ணை மார்கெட்ல வச்சு பார்த்திருக்கா ... அவ முகத்தில ஏதோ கலக்கம் தெரிஞ்சுதாம் .. அதான் நேர்ல போய் பார்த்திட்டு வரலாம்னு கிளம்பிட்டு இருக்கேன் ..'

'பார்த்தீரா !! ஒரு முக மாற்றத்தை வச்சே ஒருத்தரோட மனநிலையை தெரிஞ்சுக்க முடியுது .. உமக்கு தெரியுமா அமெரிக்காவுல ஒரு டாக்டர் ஒருத்தரோட கையெழுத்தை வச்சே அவங்க மனநிலைய கண்டுபிடிக்க முடியும்னு சொல்லியிருக்காரு ..'

'அப்படியா??'

'போன வாரம் என்னோட நண்பர் உதயன் கிட்ட பேசினேன் , முன்னாடிகாலத்தில வீட்டுல போடுற கோலம் மூலமா வீட்டுல உள்ள நல்லது கெட்டது எல்லாத்தையும் சொல்லுவாங்களாம்..'

'கோலம் மூலமாவா???!!!'

'கோலம் போடுற நிறம் , புள்ளிகள் மற்றும் வளைவுகள்(சுழிகள் ) மூலம் பக்தி , கலாச்சாரம் , வீட்டில் உள்ள நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகள் ,நோய் ,தொழில் போன்ற எல்லாத்தையும் கண்டுபிடிக்க முடியும் .'

'ரொம்ப ஆச்சரியமா இருக்கே ..'

'அது மட்டுமல்ல ஒரு வீட்டுல கல்யாணத்துக்கு தயாரா வயதுக்கு வந்த பொண்ணு இருந்தா ... அதுக்கும் ஒருவகையான கோலம் இருக்காம். '

'அப்போ முன்னாடியெல்லாம் பொண்ணு தேடுரதிண்ணா, சும்மா நாலு தெரு நடந்து கோலங்களை மட்டும் பார்த்தா போதும்..அப்படி தானே '

'அதே தான்..கப்புன்னு புடிச்சுகிட்டீரே!!! '

'குரு அய்யா !! உங்க மூலம் கோலம் பற்றி நிறைய தெரிஞ்சுகிட்டேன் ..ரொம்ப நன்றிங்கய்யா..'

'www.udhayam.in இந்த சைட்டுல போய் பாரும் இன்னும் நிறைய கத்துக்கலாம் ..'

' ரொம்ப நன்றி குரு !! அப்புறம் உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்னு நினைச்சிகிட்டிருந்தேன் ..கேட்கவா'

' என்ன தயக்கம் கேளும் '

'அது வந்து உங்களுக்கும் உங்க சம்சாரத்துக்கும் இன்னைக்கு காலையில சண்டையா ??'

'ம்ம்ம் .............................................ம்ம்ம்
ஆமாம் உமக்கு எப்படி தெரியும்...'

'ஒம்ம பொண்டாட்டி போட்ட கோலம் கன்னத்தில பளிச்சினு தெரியுதே ....'