Monday, September 2, 2024

 வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் அலுவலக அக்கவுண்டன்ட் ஒருவர் தன் பக்கத்து டேபிள் நண்பரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் ரொம்பவும் சீரியஸாய் என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்.
"வீட்ல எலி பொறி இருக்கா..?"
"இருக்கு..."
"அதுல ஒரு கருவாட்டுத் துண்ட மாட்டி வச்சிடு...!"
"நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..."
"ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..."
"மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..."
"சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..."
"கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..."
"அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..."
அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்க மாட்டோம்பா...!"
மிகுந்த டயர்டாகிப் போன அவர் அந்த அக்கவுண்டன்டிடம் கேட்டார்.
"கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல....
அப்புறம் அந்தப் பாழாப்போன எலி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?".



Thursday, October 10, 2013

வடை போச்சே !!!!!

பெரும்பாலான ஆண்கள்
இடது கைகளிலேயே கைக்கடிகாரத்தை அணிகி
அதற்கு நேர் மாறாக பெண்கள்
கைகடிகாரத்தை வலது கைகளில்
அணிகிறார்கள்..
சில விதிவிலக்குகள் இருந்தாலும்....
அவரவர் வசதிக்கு ஏற்ப அதை அணிகிறார்கள்
என்றாலும்..
இந்த செயலுக்கும்
அணிபவர்களின் மனநிலைக்கும் ஒரு நெருங்கிய
தொடர்பு
இருப்பதாகவே காலம் காலமாக
நம்பப்பட்டு வந்தது.....இன்றும்
நம்பப்பட்டு வருகிறது...
மிக்ச்சிகன் பல்கலைகழகத்தில் க்யூபாவை சேர்ந்த
ஜார்ஜ் போலே [George Bole] என்பவரும்
போலந்தை சேர்ந்த எர்னெஸ்ட்
ரூதர்போர்டு [Earnest Rutherford] என்பவரும்
இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை
ஆராய்ந்தார்கள்.
.
.
இரண்டாண்டு கால ஆராய்ச்சியின் முடிவில்
தங்களது
ஆய்வறிக்கையை சர்வதேச
விஞ்ஞானிகள் மாநாட்டில் சமர்ப்பித்தார்கள்..
முடிவுகள்
சற்று அதிர்ச்சி தரக்கூடியவையாகவ
ே அமைந்தன..
இருந்தாலும்
பல விஞ்ஞானிகளின் எதிர்ப்புகளுக்கும்..
கைதட்டல்களுக்கும் மத்தியில் இவர்கள் தங்கள்
ஆராய்ச்சியின்
முடிவுகளை இதர விஞ்ஞானிகளை
ஏற்றுக்கொள்ள வைத்தார்கள்.
.
.
ஆண்கள் இடக்கையிலும்..பெண்கள் வலக்கையிலும்
கைக்கடிகாரம் அணிவது
-
-
-
-
-
-
-
-
-
-
"மணி" என்னாச்சு ன்னு பார்க்கத்தான்.

வடை போச்சே !!!!!

Saturday, July 9, 2011

கருப்பு ஆடா ? வெள்ளை ஆடா?


ஒரு மலைப் பகுதியில் ஒரு சிறுவன் ஆடு மேய்த்து கொண்டு இருக்கிறான் , அதில் கொஞ்சம் கருப்பு நிற ஆடுகள் மற்றவை வெள்ளை நிற ஆடுகள் . 
அப்போது வழிபோக்கர்  ஒருவர் அந்த சிறுவனிடம் சென்று 

'தம்பி நீ எவ்வளவு வருசமா ஆடு மேய்க்கிற ?'

'ஒரு ரெண்டு வருசமா மேய்க்கிறேன் அய்யா'

'இதுல மொத்தம் எவ்வளவு ஆடுகள் இருக்கு ?'

'நீங்க கருப்பு ஆடுகளை கேட்குறீங்களா ? வெள்ளை ஆடுகளை கேட்குறீங்களா?'

'ம்ம்ம் கருப்பு ஆடுகள் மொத்தம் எவ்வளவு இருக்கும் '

'சரியா நூறு இருக்கும்'

'சரி ..அப்ப வெள்ளை ஆடுகள் ?'

'அதுவும் ஒரு நூறு இருக்கும்.'

'அப்புறம் ஆடுகளோட தோல் வித்தா எவ்வளவு விலை கிடைக்கும்?'

'நீங்க கருப்பு ஆட்டு தோலை பத்தி கேட்கிறீங்களா? இல்லை வெள்ளை ஆட்டு தோலை கேட்கிறீங்களா?'

'ம்ம்ம்ம் வெள்ளை ஆட்டு தோல் எவ்வளவு கிடைக்கும் ?'

'அது ஒரு ரெண்டாயிரம் கிடைக்கும் '

'அப்படின்னா கருப்பு ஆட்டு தோலு?'

'அதுக்கும் ரெண்டாயிரம் கிடைக்கும்'

'!!!...சரி ..ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கிடைக்கும்?'

'வெள்ளை ஆட்டிலைங்களா? கருப்பு ஆட்டிலைங்களா?'

'ம்ம்ம்ம்  வெள்ளை ஆட்டில எவ்வளவு பால் கிடைக்கும்..?'

'சராசரியா ஒண்ணரை லிட்டர் பால் கிடைக்கும்.'

'அப்போ கருப்பு ஆட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்?'

'அதுவும் சராசரியா ஒண்ணரை லிட்டர் கிடைக்கும்.'

வழிப் போக்கர் சற்று கோபத்துடன் ..
'ஏன்பா..கருப்பு ஆடுகளும் சரி வெள்ளை ஆடுகளும் சரி ..எல்லாத்திலையும் சமமா தானே இருக்கும் .அப்புறம் ஏன் நீ பிரிச்சு பிரிச்சு சொல்ற?'

'அதுங்கய்யா...'

'சொல்லு'

'கருப்பு ஆடுகள் எல்லாம் எங்க அப்பாவோடது ..'

'அப்படியா ...அப்ப வெள்ளை ஆடுகள்?'

'அதுவும் அப்பாவோடது தான்...'

'?!?!?!@'

Thursday, May 26, 2011

சிகரெட்டில் இருந்து விடுபட

குரு தன் மகனுடம் மருத்துவமனைக்கு செல்கிறார் ..
.
'உங்க பையனுக்கு தலையில எப்படி அடி பட்டுச்சு '

'அது வந்து டாக்டர் ......' 

' டாக்டர் கிட்ட எப்பவுமே உண்மையை மறைக்க கூடாது ...உண்மையை சொல்லுங்க ...'

'பையன் நேத்திக்கு குடிச்சிட்டு போஸ்ட் கம்பத்தில மோதிட்டான்...அது தான் தலையில காயம் '

'ஓ .... '

'நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் ... அவன் கேட்க மாட்டேங்குறான் டாக்டர். பாக்கெட் மணி கூட கட் பண்ணி பார்த்திட்டேன் ..எனக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க டாக்டர் '

'குரு சார் !!! எந்த ஒரு பழக்கத்தையும் ,அது நல்ல பழக்கமாகட்டும் அல்லது கெட்ட பழக்கமாகட்டும் , அதை திடீர்னு நிறுத்தக்கூடாது ...அப்படி நிறுத்தினா பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு ...'

'அப்படின்னா ...இந்த பழக்கத்தை எப்படி நிறுத்திறது ?'

' கொஞ்சம் கொஞ்சமா நிறுத்த முயற்சிக்கணும் ..இல்லைனா ..... இன்னொரு நல்ல பழக்கத்தை பழக செய்து ஒரு கெட்ட பழக்கத்தில் இருந்து விடுபடலாம் ...'
'எப்படி டாக்டர் ?'

'ம்ம்ம்ம் உங்களுக்கு பின்னாடி கருப்பு சட்டை போட்டுட்டு உக்காந்திருக்காரே !!! அவரு கூட பயங்கர ஸ்மோக்கர் !!! அவரு இரண்டு நாள் முன்னாடி என்னை பார்க்க வந்திருந்தாரு ....சிகரெட்டில் இருந்து விடு படனும்னு ஆசை பட்டாரு ...'

'நல்லது நீங்க என்ன சொன்னீங்க ...'

'நான் அவருக்கு சிகரெட் பழக்கத்தை மாற்றுவதற்காக சுவிங்கம் பயன் படுத்த சொன்னேன் ....இதனால அவரால முழுசா சிகரெட்டில் இருந்து விடுபட முடியும்னு நம்பறேன்....இருங்க அவருக்கு என்ன முன்னேற்றம்னு அவர் வாயாலே கேளுங்க ....அவரை கூப்பிடுறேன் ....'

'மிஸ்டர்.மணி கொஞ்சம் உள்ளே வரீங்களா?'

கருப்பு சட்டைக்காரர் உள்ளே வருகிறார் ...

'மிஸ்டர்.மணி சிகரெட்டை மறக்க சுவிங்கம் யூஸ் பண்ண சொன்னேனே ...இப்போ சிகரெட்டை கொஞ்சம் மறக்க முடியுதா ?'

'அது ... வந்து ..'

'இவங்க இருக்கட்டும் பரவாயில்ல தைரியமா சொல்லுங்க .....'

'அது வந்து ரெண்டு நாளா ....முயற்சி பண்றேன் .....என்னால சுவிங்கத்தை பத்த வைக்கவே முடியல ....'

'??????!!!!!!!!'

விதைகள் இனி வீணாகாது..


ஒரு ஊரில் கொஞ்சம் மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்துகொண்டு இருந்தனர் ..அவர்களுக்கு ஒரு கவலை, அதாவது வயலில் இறங்கி நெல் விதை விதைக்கும் போது விதைப்பவரின் காலில் மிதிபட்டு விதைகள் பாழ் படுகிறது....இதை எப்படி தடுப்பது???
அனைவரும் கூடி யோசித்து இறுதியில் ஒரு முடிவெடுக்கிறார்கள் ....அப்பாடா இனி விதைகள் வீணாகாது ....அனைவருக்கும் ஒரே சந்தோசம் 
அவங்க எடுத்த முடிவு என்னன்னு கேட்கிறீங்களா ....
இனி முதல் விதைப்பவரை நாலு பேர் தூக்கி கொண்டு வயலில் இறங்குவர் ...(விதைப்பவர் கால் வயலில் படாது தானே )

Sunday, April 24, 2011

நாவினால் சுட்ட வடு


ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.

கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி "கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்" என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.


இப்படிக்கு,
நந்தம்....

திருப்தியே நிம்மதி - குட்டி கதை

குருவிடம் வந்தான் ஒருவன்.

‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’

குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்கஹீ£ரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார்.

குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.

‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’

‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...’’

‘‘அதான் பிரச்னையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான். ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’

‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும், புரிகிறதா?’’ என்றார் குரு.

மனமார்ந்த நன்றி!!!!

இப்படிக்கு,
நந்தம்....