
கையில் வாட்டர் பாட்டில் டன் வந்துகொண்டிருந்தார் நம்ம குரு , அப்போது நண்பர் வெங்கடாசலம் எதிர்ப் பட்டார்
'என்ன குரு கையில வாட்டர் பாட்டில் ..'
'உமக்கு ஒண்ணு தெரியுமா ? தண்ணீர் நல்ல மருந்தாக்கும்..'
'கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் '
'நம்ம உடம்போட மொத்த எடையில் எழுபது பங்கு தண்ணீர் தான்..அது உடல் முழுக்க இருந்தாலும் மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும் இரத்தம் , உமிழ்நீர்,நிணநீர் போன்ற திரவங்களிலும் , ஜீரண உறுப்புகளில் உள்ள சுரப்பிகளிலும் அதிக படியாக இருக்கு .'
'ஆமாம் குரு , ரேடியோல கூட போன வாரம் சொன்னாங்க ..நீங்க மேல சொல்லுங்க '
'நிறைய நோய்களுக்கு தண்ணீர் தான் மறைமுக மருந்தா இருக்கு ..நம்ம உடம்பில் உள்ள ஒவ்வொருபாகமும் ஒரு டாக்டர் தான்..'
'அப்படியா ?? ஆச்சரியமா இருக்கே !!!!'
'உண்மை தான் !! நமது உடம்புக்கு தண்ணீர் இன்மையால் ஏற்படும் உபாதை வரும்முன் அவைகள் நமக்கு தாகத்தை தோற்றுவிக்கின்றன ..இதனால் பல நோய்கள் வருமுன் நாம் காக்கப் படுகிறோம்.'
'அடடா...'
'ஒரு நாளைக்கு மூணு லிட்டர் தண்ணீராவது குடிக்கணும் இல்லைனா உடலில் நீர்சத்து குறைந்து தலைவலி வந்து விடும் ..'
'ரொம்ப நன்றி குரு !! எனக்கும் தாகம் எடுக்குது
கொஞ்சம் குடிச்சுக்கறேன் '
கொஞ்சம் குடிச்சுக்கறேன் '
'அய்யயோ குடிச்சிட்டீங்களா இது குடிக்கிற பாட்டில் இல்ல ...பேட்டரியில் ஊத்துற disட்ரில் வாட்டர் '
வாவ்.... சூப்பரான கருத்து சொல்லியிருக்கீங்க
ReplyDeleteஇன்றைய காலகட்டத்துல நிறைய பேர் தண்ணியோட அருமை தெரியாம இருக்காங்க அவங்களுக்கெல்லாம் பயன்படுர கட்டுரை
:))