ஒரு மலைப் பகுதியில் ஒரு சிறுவன் ஆடு மேய்த்து கொண்டு இருக்கிறான் , அதில் கொஞ்சம் கருப்பு நிற ஆடுகள் மற்றவை வெள்ளை நிற ஆடுகள் .
அப்போது வழிபோக்கர் ஒருவர் அந்த சிறுவனிடம் சென்று
'தம்பி நீ எவ்வளவு வருசமா ஆடு மேய்க்கிற ?'
'ஒரு ரெண்டு வருசமா மேய்க்கிறேன் அய்யா'
'இதுல மொத்தம் எவ்வளவு ஆடுகள் இருக்கு ?'
'நீங்க கருப்பு ஆடுகளை கேட்குறீங்களா ? வெள்ளை ஆடுகளை கேட்குறீங்களா?'
'ம்ம்ம் கருப்பு ஆடுகள் மொத்தம் எவ்வளவு இருக்கும் '
'சரியா நூறு இருக்கும்'
'சரி ..அப்ப வெள்ளை ஆடுகள் ?'
'அதுவும் ஒரு நூறு இருக்கும்.'
'அப்புறம் ஆடுகளோட தோல் வித்தா எவ்வளவு விலை கிடைக்கும்?'
'நீங்க கருப்பு ஆட்டு தோலை பத்தி கேட்கிறீங்களா? இல்லை வெள்ளை ஆட்டு தோலை கேட்கிறீங்களா?'
'ம்ம்ம்ம் வெள்ளை ஆட்டு தோல் எவ்வளவு கிடைக்கும் ?'
'அது ஒரு ரெண்டாயிரம் கிடைக்கும் '
'அப்படின்னா கருப்பு ஆட்டு தோலு?'
'அதுக்கும் ரெண்டாயிரம் கிடைக்கும்'
'!!!...சரி ..ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கிடைக்கும்?'
'வெள்ளை ஆட்டிலைங்களா? கருப்பு ஆட்டிலைங்களா?'
'ம்ம்ம்ம் வெள்ளை ஆட்டில எவ்வளவு பால் கிடைக்கும்..?'
'சராசரியா ஒண்ணரை லிட்டர் பால் கிடைக்கும்.'
'அப்போ கருப்பு ஆட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்?'
'அதுவும் சராசரியா ஒண்ணரை லிட்டர் கிடைக்கும்.'
வழிப் போக்கர் சற்று கோபத்துடன் ..
'ஏன்பா..கருப்பு ஆடுகளும் சரி வெள்ளை ஆடுகளும் சரி ..எல்லாத்திலையும் சமமா தானே இருக்கும் .அப்புறம் ஏன் நீ பிரிச்சு பிரிச்சு சொல்ற?'
'அதுங்கய்யா...'
'சொல்லு'
'கருப்பு ஆடுகள் எல்லாம் எங்க அப்பாவோடது ..'
'அப்படியா ...அப்ப வெள்ளை ஆடுகள்?'
'அதுவும் அப்பாவோடது தான்...'
'?!?!?!@'
